உங்கள் கணினிக்கு ஒரு எளிமையான 3D பிடிஃஎப் ரீடர் (3D Pdf Reader) வேண்டுமா?

விதவிதமான பிடிஃஎப் ரீடர்கள் இருந்தாலும் புதியதாக இந்த ரீடரும் உள்ளது.எதனை பதிவிறக்கம் செய்ய click here to download என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு :- பின்பு Alternative download 1 கிளிக் செய்யவும்.
இதனை நிறுவியதும் ஒரு விண்டோ திறக்கும். கணினியில் உள்ள பிடிஃஎப் ஃபைலை தேர்வு செய்யவும். இப்போது இடதுபுறம் உங்களுக்கு Table of contents கிடைக்கும். நமது புத்தகத்தில் உள்ள பக்கங்கள் தெரியவரும்.
முழு ஸ்கிரீன் அளவிற்கும் புத்தகத்தை படிக்கலாம்.
புத்தகத்தின் முழு அளவினையும் பார்க்கலாம். ஒவ்வொரு புத்தகமாகவும் பார்க்கலாம்.புத்தகத்தின் எழுத்து , அளவு தெரியவில்லை என்றால் பெரிது செய்தும் புத்தகத்தை படிக்கலாம்.
வலதுபுறம் புத்தகத்தின் முதல் பக்கம் தெரியவரும். இதில் புத்தகத்தின் ஓரமாக கர்சரை கொண்டு சென்றால் அடுத்த பக்கம் திரும்பும். நாம் புத்தகம் நேரடியாக படிக்கையில் புத்தகத்தை திருப்புவதுபோல் இதிலும் நாம் புத்தகத்தின் பக்கங்களை திருப்பி படிக்கலாம்.
THANKS TO GOOGLE
0 comments:
Post a Comment