வாட்ஸ் டாக் (Whatsdog) : வாட்ஸ் ஆப்-பில் பிறரை கண்காணிக்க உதவும் ஆப்
நாம் சிலருக்கு வாட்ஸ் ஆப் -பில் மெசேஜ் செய்து விட்டு பதிலுக்காக காத்திருப்போம். ஆனால் அவர் அதை திறந்து கூட பார்க்காமல் நம்மை புறக்கணித்து இருக்க முடியும். நாம் காத்துக் கொண்டே இருப்போம். Privacy Settings -ல் Last Seen மறைத்து வைத்து இருப்பார்கள். அடுத்து நேரில் பார்த்து கேட்கும் போது நான் வாட்ஸ் ஆப்-ல 2 நாளா வரல என்பார்கள்.
உண்மையிலேயே நம்மை புறக்கணிப்பது தெரிந்தால் நாம் ஒதுங்கி விடலாம். இதனை எளிதாக அறிந்து கொள்ள ஒரு ஆப் உதவுகிறது. வாட்ஸ் டாக் எனும் இந்த ஆப்பின் மூலம் நமது வாட்ஸ் ஆப் காண்டாக்ட் யாரேனும் ஒருவரை மட்டும் கண்காணிக்க முடியும்.
வாட்ஸ் டாக் (Whatsdog) நீங்கள் கண்காணிக்கும் நபர் எப்போதெல்லாம் வாட்ஸ் ஆப்-பில் ஆன்லைனில் வருகிறார் என்பதை மோப்பம் பிடித்து கூறி விடும். உங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்து விடும். தேதி வாரியாக விரிவான ரிப்போர்ட்-டாகவும் கிடைக்கும்.
இதை டவுன்லோட் செய்ததும், கண்காணிக்க வேண்டிய நபரின் மொபைல் எண்-ஐ பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் அன்றாடம் அவர் ஆன்லைன் வரும் நேரம் அந்த ஆப்பில் பதிவாகி கொண்டே இருக்கும். இதன் மூலம் ஒரே ஒரு நபரை மட்டுமே கண்காணிக்க முடியும்.
டவுன்லோட் செய்ய கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்-பின் முகவரி : https://play.google.com/store/apps/details?id=com.secondlemon.whatsdogpremium
THANKS TO GOOGLE

Wow nice
ReplyDelete